ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒப்படைத்தார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரின்போது ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில், தோனி மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
ஆனால், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த சிஎஸ்கே அணி, புள்ளிப் பட்டியலில் டாப் 10-இல் கடைசி இடம் பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக சிஎஸ்கேவுக்கு அமைந்தது.
இதனிடையே, கடந்தாண்டு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று தகவல்கள் பரவிய நிலையில், 2026 ஆம் ஆண்டு உடல்நிலை பொறுத்து முடிவெடுப்பேன் என்று தோனி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி உறுதியாக விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.