இந்தியா - ஆஸி. மோதும் கடைசி டி20 போட்டியில் மின்னலின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், பிரிஸ்பேனில் தொடங்கிய ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. 4.5 ஓவர்களில் இந்திய அணி 52 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இல்லாமல் இருக்கிறது.
ஆஸி. அணியினர் மோசமான ஃபீல்டிங்கினால் வந்த கேட்சுகளை எல்லாம் தவறவிட்டனர்.
ஷுப்மன் கில் 29, அபிஷேக் சர்மா 23 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.