கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை சந்தித்ததாக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பல்வேறு தடுமாற்றங்களை எதிர்கொண்டதாகவும், தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த மிகவும் கடுமையாக உழைத்ததாகவும் ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு நான் அதிக அளவிலான தடுமாற்றங்களை சந்தித்தேன். ஆனால், அவை எதனையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் கடிமான உழைத்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக இந்திய அணியுடன் இணைந்தபோது, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைத்தேன். இறுதிப்போட்டி எப்போதும் மிகவும் சவாலானதாக இருக்கும். முதலில் பதற்றமாக இருந்தேன். அதன் பின், ஆட்டத்தில் கவனம் செலுத்தி ரன்கள் குவித்தேன் என்றார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஷஃபாலி வர்மா 87 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட, அவருக்கு மாற்று வீராங்கனையாக நாக் அவுட் போட்டிகளில் ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.