நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 4-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று (நவம்பர் 10) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருக்கையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அதன் பின், மழை நின்றதும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மழை தீவிரமடைந்ததால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது.
மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையின் தீவிரம் குறையாததால் போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வருகிற நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.