டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்தாது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் ஆர்ச்சர்அந்த மோசமான சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாட இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.
இந்தத் தொடரில் 5 போட்டிகள் கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி நவ.21ஆம் தேதி பெர்த் திடலில் தொடங்குகிறது.
இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓவரில் ஆஸி. பேட்டரும் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் விடாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக ஆர்ச்சரின் 164 பந்துகளில், ஸ்மித் 94 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.