ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
ஷெஃபீல்டு ஷீல்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது, ஹேசில்வுட்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் காயத்தின் தீவிரம் குறித்து உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது காயம் காரணமாக ஹேசில்வுட்டும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ள ஹேசில்வுட், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி, பிரதான பந்துவீச்சாளர்களில் இருவர் இல்லாமல் முதல் முறையாக களம் காண உள்ளது.
அதேபோல, கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.