டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
டெஸ்ட்டில் 4,000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் நான்காவது வீரராக ஜடேஜா இணைந்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் உலக டெஸ்ட் அரங்கில் 4,000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் நான்காவது வீரராக ஜடேஜா இணைந்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்தச் சாதனையை ஐயன் போதம், கபில் தேவ், டேனியல் வெட்டோரி நிகழ்த்தியுள்ளனர்.
சிஎஸ்கேவில் இருந்து ராஜஸ்தானுக்குச் சென்றுள்ள ஜடேஜாவுக்கு, இரு அணியின் ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.