தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளது.
124 ரன்களை அடிக்க முடியாமல் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 159க்கு ஆல் அவுட்டாக இந்திய அணி 189க்கு ஆல் அவுட்டானது. அடுத்து, இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 153-க்கு ஆல் அவுட்டானது.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை சேஸ் செய்ய முடியாமல் இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.
தெ.ஆ. அணி சார்பில் சிமோன் ஹார்மர் 4, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் தெ.ஆ. அணி முதல்முறையாக டெஸ்ட்டில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.