பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா பேசியுள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. மினி ஏலத்துக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்கவும், விடுவிக்கவும் செய்தனர். சில வீரர்களை டிரேடிங் மூலம் அணிகள் வாங்கவும், விற்கவும் செய்தன.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி செல்லவே தேவையில்லை என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ஒன்றாக இருக்கும் கலாசாரத்தை வளர்க்க நாங்கள் முயற்சித்துள்ளோம். நாங்கள் விடுத்த வீரர்களையும் விடுவிக்க வேண்டும் என விடுவித்துவிடவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வீரர்களை விடுவிக்கும் முடிவு கடினமானதாகவே இருந்தது. அணியில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், அணி சமபலத்துடன் இருக்கிறது. அதனால், நாங்கள் ஐபிஎல் ஏலத்துக்கு செல்ல வேண்டிய தேவை உண்மையில் இல்லை. ஆனால், எங்களுடைய தற்போதையை அணியை மேலும் வலுவாக்க முயற்சி செய்வோம் என்றார்.
ரிக்கி பாண்டிங் - ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த 11 சீசன்களில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.5 கோடி கையிருப்புத் தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.