டி20 கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய வீரர்களில் இந்தப் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடத்தில் இருக்கிறார்.
சயித் முஷ்டக் அலி தொடரில் ஜம்மு காஷ்மீர் உடனான போட்டியில் மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில், மகாராஷ்டிர அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ருதுராஜ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் அவரது டி20 கிரிக்கெட் பயணத்தில் அவர் தனது 5,000 ரன்களை கடந்துள்ளார்.
இவரை விடவும் குறைந்த போட்டிகளில் கே.எல்.ராகுல் 5,000 ரன்களை கடந்திருக்கிறார்.
அதிவேகமாக 5,000 டி20 ரன்களை கடந்தவர்கள்
1, கிறிஸ் கெயில் - 132 இன்னிங்ஸ் (மே.இ.தீவுகள்)
2. கே.எல்.ராகுல் - 143 இன்னிங்ஸ் (இந்தியா)
3. ஷான் மார்ஷ், - 144 இன்னிங்ஸ் (ஆஸி.)
4. டெவோன் கான்வே - 144 இன்னிங்ஸ் (நியூசிலாந்து)
5. ருதுராஜ் கெய்க்வாட் - 145 இன்னிங்ஸ் (இந்தியா)
6. பாபர் அசாம் - 145 இன்னிங்ஸ் (பாகிஸ்தான்)
7. ஷுப்மன் கில் - 152 இன்னிங்ஸ் (இந்தியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.