இந்திய கிரிக்கெட் அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் தொடரை முற்றிலுமாக இழந்த நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய தோல்விகள் (ரன்கள் அடிப்படையில்)
408 ரன்கள் - தெ.ஆ. எதிராக (குவாஹாட்டி, 2025)
342 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக (நாக்பூர், 2004)
341 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக (கராச்சி, 2006)
337 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக (மெல்போர்ன், 2007)
333 ரன்கள் - ஆஸி.க்கு எதிராக, (புணே, 2017)
329 ரன்கள் - தெ.ஆ. எதிராக (கொல்கத்தா, 1996)
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்றது.
குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 489/10 ரன்கள் எடுக்க, இந்தியா 201/10 என்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 260/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆட்ட நாயகனாக மார்கோ யான்செனும் தொடர் நாயகனாக சிமோன் ஹார்மரும் தேர்வானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.