மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, ஷுப்மன் கில் 129* ரன்கள் எடுத்தார்கள்.
தில்லியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாளில் 318 ரன்கள் குவித்தது.
இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 134.2ஆவது ஓவரில் துருவ் ஜுரெல் 44 ரன்களில் ஆட்டமிழந்ததும் டிக்ளேர் செய்வதாக கில் அறிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜோமெல் வாரிக்கேன் 3 விக்கெட்டுகள், ரஸ்டன் சேஸ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
இந்தத் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.