நமீபியா அணி டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
முதல்முறையாக தென்னாப்பிரிக்காவுடன் மோதிய நமீபியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட தென்னாப்பிரிக்க அணி நமீபியாவுக்குச் சென்றிருந்தது. டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் தெ.ஆ. அணி 134/8 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ஸ்மித் 31 ரன்கள் எடுத்தார். நமீபியா சார்பில் ரூபன் டிரம்பல்மேன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 138/6 ரன்கள் எடுத்து வென்றது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவையான நிலையில் 6, 1, 2, 1, 0, 4 என 14 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் நமீபியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நமீபியா அணி டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளது. ரூபன் டிரம்பல்மேன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இரண்டாவது முறையாக நமீபியா கடைசி பந்தில் டி20யில் வென்றுள்ளது. இதற்கு முன்பாக 2022-இல் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
நான்காவது முறையாக ஒரு முழு நேர கிரிக்கெட் அணியை நமீபியா வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்பாக அயர்லாந்து, ஜிம்பாம்வே, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.
தெ.ஆ. அணி கடைசி பந்தில் இரண்டாவது முறையாக தோற்றுள்ளது.
தெ.ஆ. அணி துணை நாடுகளிடம் 2ஆவது முறையாக தோல்வியுற்றுள்ளது. முதலில் 2022 உலகக் கோப்பையில் நெதர்லாந்திடம் தோற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.