இந்தியாவுக்கு எதிரான ஆஸி.யின் முதல் ஒருநாள் போட்டியில் ஆடம் ஸாம்பா, ஜோஷ் இங்லீஷ் விளையடாமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம், குடும்ப சூழ்நிலையின் காரணம் என முதல்கட்ட தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் போட்டிகள் அக்.19ஆம் தேதியும் டி20 போட்டிகள் அக்.29ஆம் தேதியும் தொடங்குகின்றன.
பெர்த்தில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் ஆடம் ஸாம்பா, ஜோஷ் இங்லீஷ் விளையடாமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்காத இங்லீஷ், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
இவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குறைவான போட்டிகளிலே விளையாடியுள்ள இவருக்கு நல்லதொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, மற்றுமொரு விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி ஷெஃபீல்டு தொடரில் விளையாடுவதால் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரி, ஸாம்பாவும் மூன்றாவது போட்டியில் இங்லீஷும் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.