மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடந்த அக்.12ஆம் தேதி இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய ஆஸி. அணி 49 ஓவர்களில் 331/7 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு ஐசிசி 2.22 விதியின்படி போட்டி ஊதியத்திலிருந்து 5 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி முக்கியமான அடுத்த போட்டியில் இங்கிலாந்துடன் அக்.19-இல் மோதவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.