ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டியில் மழை நின்று போட்டி தொடங்கப்பட்டது.
மழையின் காரணமாக, 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டி, 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
பெர்தில் நடைபெற்றுவரும் முதல் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
13.2 ஓவர்களில் 45 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஜோஷ் ஹேசில்வுட் 2, நாதன் எல்லீஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தற்போது, அக்ஷர் படேல் மற்றும் கே.எல். ராகுல் விளையாடி வருகிறார்கள். தற்போது, இந்திய நேரப்படி மதியம் 12.34 மணிக்கு மீண்டும் மழை குறுக்கிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.