ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது 34-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
மிட்செல் மார்ஷ் சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பெர்த் நகரில் பிறந்தவர். வலதுகை பேட்டரான இவர் ஆஸி. அணிக்கு வெள்ளைப் பந்தில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர்களில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவுடன் விளையாடி வருகிறது.
கடந்த ஆகஸ்டில் இருந்து மிட்செல் மார்ஷ் 13, 22, 54, 88, 18, 100, 85, 9*, 103*, 46* என ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். சராசரி 76.9ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.