உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 27 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் ஷர்மின் அக்தர் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஷோபனா மொஸ்டாரி 26 ரன்களும், ரூபியா ஹைதர் 13 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கௌர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, இந்திய அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.