ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து பிரபல நியூசிலாந்து வீரர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 7683 ரன்களுடன் கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக ராஸ் டெய்லர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஓமனில் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக நடத்தப்படும் தொடரில் சமோயா அணிக்காக ராஸ் டெய்லர் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
41 வயதாகும் ராஸ் டெய்லர் சமோயா அணிக்காக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்கான தொடரில் விளையாடவுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் பப்புவா நியூ கினியாவை எதிர்த்து சமோயா விளையாடவுள்ளது.
மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளது குறித்து ராஸ் டெய்லர் பேசியதாவது: ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து தங்களது அணிக்கு உதவுமாறு வீரர்கள் கேட்பது சக்திவாய்ந்த விஷயமாக உள்ளது. நான் மிகவும் சிறப்பான உடல்தகுதியுடன் இருக்கிறேன் எனக் கூறமாட்டேன். ஆனால், எல்லைக்கோட்டில் வேகமாக ஓடி பவுண்டரிகளை தடுக்கும் அளவுக்கு நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸி. மகளிரணி அறிவிப்பு: 8-ஆவது உலகக் கோப்பையை வெல்லுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.