ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆஸி. பேஸ் டிரையோக்களின் கடைசி தொடராக ஆஷஸ் டெஸ்ட் இருக்காது எனக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை ’ஆஸி. பேஸ் டிரையோ’ என அழைக்கப்படுகிறார்கள்.
மும்மூர்த்திகள்...
ஆஸ்திரெலிய அணியின் தூண்களாக ஸ்டார்க் (35), கம்மின்ஸ் (32), ஹேசில்வுட் (34) இருக்கிறார்கள். மூவருமே முப்பதைக் கடந்ததால் இன்னும் எத்தனை வருஷன் விளையாடுவார்கள் எனத் தெரியவில்லை.
சமீபத்தில் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஹேசில்வுட் காயத்தால் அவதியுறுகிறார். பாட் கம்மின்ஸ் நியூசி., இந்தியாவுடனான வெள்ளைப் பந்து தொடரை காயம் காரணமாக புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், ஹேசில்வுட் சென் ரேடியாவில் இது குறித்து பேசியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம்...
தற்போதைய நிலைமைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தொடருக்கு பின்பு உட்கார்ந்து இது குறித்து சிந்திப்போம்.
நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டாண்டுகளில் அதிகமான போட்டிகள் வரவிருக்கின்றன.
ஆஷஸ் தொடர் மட்டுமல்லாமல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் ஆர்வமாக இருக்கிறது.
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை...
எங்களிடம் இன்னும் சில ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மிச்சம் இருக்கிறதென நினைக்கிறேன்.
கடைசி சில வருடங்களில் வெள்ளைப் பந்தில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் நல்ல ஷீல்டு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.
ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பரில் நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.