ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன.
இலங்கை அணியில் மாற்றம்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் ஜனித் லியாநாகே கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, கமில் மிஷாரா, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா.
வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி இலங்கை அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 6 வாரங்களுக்கு பந்துவீச மாட்டேன்: பாட் கம்மின்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.