ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஆடவர் அணி.
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்தது. இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் 16 பந்துகளில் 187.50 ஸ்ட்ரைக்ரேட்டுடன் அரேபிய பந்துவீச்சை பறக்கவிட்டார். சுப்மன் கில் 20 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.