எங்களது பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அவரது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய மகளிரணி ஹர்மன்பிரீத் கௌர் கௌர் தலைமையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கவுள்ளது. வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்கவுள்ள இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்த நிலையில், எங்களது பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அவரது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் ஷுப்மன் கில் பேசியதாவது: எனக்கு 10 அல்லது 11 வயது இருக்கும்போது, இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அகாடெமிக்கு வருவார். அங்கு நானும், மற்ற வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருப்போம். அப்போது எங்களுடன் கிரிக்கெட் விளையாடும் ஹர்மன்பிரீத் கௌர், எங்கள் அணியின் பந்துவீச்சை திடலின் அனைத்துப் புறங்களிலும் பறக்கவிடுவார். அவரது அதிரடியான பேட்டிங்கைப் பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பு அப்போது எனக்கு கிடைத்தது.
அவர் மிகவும் ஆக்ஷோரசமாக விளையாடக் கூடியவராக இருந்தார். பஞ்சாபிலிருந்து ஒருவர் இந்திய அணியின் கேப்டனாக உயரும்போது, அதனை மிகவும் பெருமைமிக்க தருணமாக உணர்கிறேன். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கௌர் இந்திய அணியை திறம்பட வழிநடத்துவதை பார்ப்பதற்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.
இளம் வீரரான ஷுப்மன் கில் அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.