ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ( 40 வயது) இலங்கை வீரர் துனித் வெல்லாலகே (22 வயது) ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தை மாற்றிய முகமது நபியின் இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகள் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 18 ஓவரில் 120/7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் முகமது நபி அசத்தலாக விளையாடினார். 19-ஆவது ஓவரில் 17 ரன்களும் 20-ஆவது ஓவரில் 32 ரன்களும் எடுத்தார்.
கடைசி ஓவரை வீசிய வெல்லாலகே ஓவரில் முகமது நபி 6, 6, 6, நோ பால் , 6, 6 அடித்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 22 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் 40 வயதான முகமது நபியின் இந்தப் போராட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கன் வென்றிருந்தால், முகமது நபி ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.