இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 பிரிவு ஆட்டத்தில் சைஃப் ஹாஸன், தௌஹித் அபார ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 பிரிவில் வங்கதேசம்-இலங்கை அணிகள் சனிக்கிழமை மோதின.
துபை சா்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இலங்கை தரப்பில் பதும் நிஸாங்கா, குஸால் மெண்டிஸ் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். நிஸாங்கா 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 22 ரன்களுடனும், குஸால் மெண்டிஸ் 3 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 34 ரன்களையும் விளாசி சிறந்த தொடக்கத்தை அளித்து வெளியேறினா்.
தஸுன் ஷனகா அதிரடி 64: மறுமுனையில் அதிரடியாக ஆடிய தஸுன் ஷனகா 6 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 64 ரன்களை விளாசி இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தாா்.
இலங்கை 168/7: கேப்டன் சரித் அஸலங்கா 21 ரன்களுக்கு அவுட்டாக, கமிண்டு மெண்டிஸ் 1, வனின்டு ஹஸரங்கா 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இலங்கை அணி 168/7 ரன்களைக் குவித்தது.
முஸ்தபிஸுா் ரஹ்மான் 3 விக்கெட்: பௌலிங்கில் வங்கதேச தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிஸுா் ரஹ்மான் 3-20 விக்கெட்டுகளையும் மெஹிதி ஹாஸன் 2-25 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
வங்கதேசம் வெற்றி 169/6: பின்னா் ஆடிய வங்கதேச அணி 19.5 ஓவா்களில் 169/6 ரன்களைச் சோ்த்து வெற்றி இலக்கை எட்டியது. ஓபனா் சைஃப் ஹாஸன் 61, தௌஹித் 58 ரன்களை விளாசி தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். இலங்கை தரப்பில்பௌலிங்கில் ஷனகா, ஹஸரங்கா தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா்.
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம், குரூப்பிரிவு ஆட்டத்தில் தோற்ற்கு பதிலடி அளித்தது.