அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹாரிஸ் ராஃப்.  படம்: ஏஎன்ஐ
கிரிக்கெட்

ஆத்திரமூட்டும் செயல்கள்... பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

பாகிஸ்தான் வீரர்கள் குறித்தான இந்தியாவின் புகார் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் தொடங்கியது எப்போது?

ஆசிய கோப்பையில் லீக் போட்டியில் இந்திய கேப்டன் பாகிஸ்தான் கேப்டனும் கைக் குலுக்க மறுத்துவிட்டதால், அப்போதிருந்தே இரு அணிகளுக்கும் பிரச்னை தொடங்கியது.

பஹல்காம் தாக்குதலுக்காக இப்படி செய்தேன் என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் வீரர்கள் செய்தது என்ன?

இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது இந்திய ரசிகர்கள் ஹாரிஸ் ராஃபிடம் ”கோலி, கோலி” எனக் கத்தினார்கள். இதற்குப் பதிலாக விமானங்கள் பறந்து கீழே விழுவது போல சைகை காண்பிப்பார்.

மேலும் 6-0 எனவும் காண்பிப்பார். அது ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை நினைவுப் படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்தபோது துப்பாக்கிச் சூடு செய்வதைப் போல கொண்டாடினார். இதுவும் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், இந்தச் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக இருப்பதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.

அடுத்து என்னவாகும்?

இரு பாகிஸ்தானியர்களும் சரியாக பதிலளிக்காவிட்டால் தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதற்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் அணி அளித்த புகாருக்கு ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் கூறியது

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்றால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

India has filed an official complaint with the ICC against Pakistan cricketers Haris Rauf and Sahibzada Farhan for their provocative gestures during the two sides' Asia Cup Super 4 game here last Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

தமிழக பேரவைத் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்த பாஜக!

அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: பின்னணி என்ன?

பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

SCROLL FOR NEXT