உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. குவாஹாட்டியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியை கேப்டனாக வழிநடத்துவது எந்த ஒரு கிரிக்கெட்டருக்கும் மிகவும் சிறப்பான தருணம் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் அணியை வழிநடத்துவது மேலும் சிறப்பானது. உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது.
நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை. அணியை வழிநடத்துவது என்பது என்னுடைய கனவில் மட்டுமே இருந்தது. சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடர் எங்களுக்கு மிகவும் அற்புதமானதாக அமையப் போகிறது என நினைக்கிறேன். இந்த தொடர் முழுவதும் எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
ஐசிசி உலகக் கோப்பையை இந்திய மகளிரணி ஒரு முறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.