140 கோடி மக்களுக்காக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக இந்திய வீரர் திலக் வர்மா மனம் திறந்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 140 கோடி மக்களுக்காக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக இந்திய வீரர் திலக் வர்மா மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் சிறிது அழுத்தமாக இருந்தது. ஆனால், மற்ற விஷயங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நாட்டினை முதன்மையாக மனதில் வைத்துக் கொண்டேன். நாட்டுக்காக இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன்.
அழுத்தம் காரணமாக நன்றாக விளையாடாமல் ஆட்டமிழந்தால், நாட்டு மக்கள் 140 கோடி பேரும் ஏமாற்றமடைந்திருப்பார்கள். பாகிஸ்தான் வீரர்களின் தேவையற்ற கிண்டல் பேச்சுகளுக்கு ஆசிய கோப்பையை வெல்வதே சரியான பதிலாக இருக்கும் என நினைத்து விளையாடினேன். நாட்டுக்காக போட்டியை வென்று கொடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.