360 கோணத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன்; தலை வணங்குகிறேன்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்
முன்னாள் இந்திய தேர்வுக்குழுத் தலைவர் சஞ்சு சாம்சன் பற்றி பேசியிருப்பதாவது...
முன்னாள் இந்திய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் குறித்து, “360 டிகிரி (கோணம்) ஷாட்டுகளை விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தலை வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாகவும் விக்கெட் விழுந்தபோது நிதானமாகவும் விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்தக் காரணத்தினால் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். இவரது பேட்டிங் குறித்து முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பேசியிருப்பதாவது:
மச்சி சஞ்சு நீ வேற லெவல் பேட்டிங். உனக்கு தலைவணங்குகிறேன். என்ன மாதிரியான ஒரு பேட்டிங் இது. இது மாதிரியான ஆடுகளத்தில் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருப்பது மிகவும் கடினமான விஷயம்.
மிகவும் பொறுப்பாக விளையாடினார். சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும் ஒரு பக்கம் சஞ்சு ஆடிக்கொண்டே இருந்தார். 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தோம். இருந்தும் ரன்ரேட் 10 புள்ளிகளிலேயே தொடர்ந்தது.
ஒரு பக்கம் துபே, பிரெவிஸ் ஆட்டமிழ்ந்தார்கள். இருந்தும் அவர் அதிரடியாகவே விளையாடினார். அதுதான் அவரது தலைசிறந்த பேட்டிங்கின் அடையாளம். மும்பையின் பந்துவீச்சை அவர் மிகவும் அலட்சியமாக விளையாடினார்.
உண்மையான 360 டிகிரி ஷாட்டுகள் என்றால் அது சஞ்சு சாம்சன் இன்று அடித்ததுதான். காலில் பந்துவீசினால் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் அடிக்கிறார், இல்லையெனில் மிட் விக்கெட்டில் சிக்ஸர் அடிக்கிறார். ஷார்ட் பந்துகளை ஃபைன் லெக்கில் ஹுக் ஷாட்டில் சிக்ஸர் அடிக்கிறார். ஆஃப் ஸைடு பந்துகளை கவர் பகுதியில் சிக்ஸர் அடிக்கிறார். பிறகு நேராக பந்துவீசினால் லாங்க் ஆன், லாங்க் ஆஃப் பகுதியிலும் சிக்ஸர் அடிக்கிறார். அவர் விளையாடிய ஷாட்டுகளிம் புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும் இதுதான் நிஜமான 360 டிகிரி ஷாட் எனப் புகழ்ந்து பேசினார்.
360 degree shot is sanju samson and i bowed him says former indian selector Srikanth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.