இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட வேண்டும்: முன்னாள் அணித் தேர்வுக்குழுத் தலைவர்
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூன் 26 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டி20 ஜூன் 26 ஆம் தேதியும், இரண்டாவது டி20 ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி இளம் வீரர் என்பது மட்டுமின்றி, அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் ஏற்கனெவே உலக டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். அவரை உடனடியாக இந்திய அணிக்குள் கொண்டுவர வேண்டும். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வேண்டும். அவரை இந்திய அணிக்குள் கொண்டுவர இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். அவரை இந்திய அணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவதில் எந்தவொரு அர்த்தமும் இருக்காது. அவர் இந்திய அணிக்காக விரைவில் விளையாடுவார். அவர் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடப் போகிறார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, 16 ஆட்டங்களில் 776 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
A former chairman of the Indian team's selection committee has stated that Vaibhav Suryavanshi should be included in the Indian squad for the T20 series against Ireland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.