கிரிக்கெட்

அரையிறுதியில் இன்று இந்தியா - ஆப்கன் மோதல்

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் புதன்கிழமை (பிப். 4) மோதுகின்றன.

தினமணி செய்திச் சேவை

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் புதன்கிழமை (பிப். 4) மோதுகின்றன.

போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 தொடர் வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு வந்துள்ளது. 5 முறை சாம்பியனாகவும் இருக்கும் இந்தியா, இந்த முறையும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிடும் எனத் தெரிகிறது.

இந்திய அணியில், விக்கெட் கீப்பர் பேட்டர் அபிஞான் குண்டூ, வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்க, கேப்டன் ஆயுஷ் மாத்ரே, ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கிலான் படேல் போன்றோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானும் 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு வந்திருக்கிறது என்றாலும், இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பே அதிகமாக உள்ளது.

இறுதியில் இங்கிலாந்து: முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

முதலில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 250 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் தாமஸ் ரியு 110 ரன்கள் விளாச, பெüலிங்கில் செபாஸ்டியன் மோர்கன், ஜேம்ஸ் மின்டோ, மேனி லம்ஸ்டென், ரால்ஃபி ஆல்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிக்க வைக்கும் தாய் கிழவி முதல் பாடல்!

கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம்?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! | DMK | TNGovt

ஓடிடியில் பராசக்தி! இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

SCROLL FOR NEXT