முகப்பு
கிரிக்கெட்

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டி!

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

Updated On : 21 பிப்ரவரி 2026, 8:26 pm IST
- படம் | AP
பகிர்:

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இன்று (பிப்ரவரி 21) முதல் தொடங்குகின்றன. பிரேமதாசா திடலில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான மழை காரணமாக போட்டி நடைபெற வாய்ப்பில்லாமல் போனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

summary

The first match of the Super 8 round between New Zealand and Pakistan has been delayed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.