இந்திய அணி வீரர் விராட் கோலி 2026 ஆம் ஆண்டில் பதிவிட்டுள்ள முதல் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் துபையில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி ஊதா நிற கோட்டும், அனுஷ்கா சர்மா அழகிய கருப்பு நிற உடையும் அணிந்துள்ளார். விராட் கோலி இந்த முதல் பதிவை வெளியிட்டதும் ரசிகர்கள் அதிக அளவிலான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கிங் அண்ட் குயின், மிகவும் அழகான ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பகிரப்பட்டது. அந்த புகைப்படத்தில் விராட் கோலியின் முகத்தின் ஒருபுறத்தில் ஸ்பைடர் மேன் வரையப்பட்டும், அனுஷ்கா சர்மாவின் முகத்தில் கண்களைச் சுற்றி வண்ணத்துப் பூச்சி வரையப்பட்டும் இருந்தது. அந்தப் பதிவில், என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விராட் கோலி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.