டோனவன் ஃபெரேரா புகைப்படங்கள்.  படங்கள்: எக்ஸ் / ஜேஎஸ்கே
கிரிக்கெட்

பேட்டிங், பௌலிங், கீப்பிங்... ஆட்ட நாயகன் டோனவன் ஃபெரேரா!

ஜேஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்ட டோனவன் ஃபெரேரா குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

எஸ்ஏ20 போட்டியில் ஜேஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்ட டோனவன் ஃபெரேரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

எஸ்ஏ 20 கிரிக்கெட்டில் முதல்முறையாக சூப்பர் ஓவர் வரைக்கும் சென்ற ஆட்டம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

டாஸ் வென்ற டிஎஸ்ஜி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய ஜேஎஸ்கே அணி 20 ஓவர்களில் 205/4 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சுபம் ரஞ்சனே 50, டு பிளெஸ்ஸி 47 ரன்கள் குவிக்க, கடைசியில் வந்த டோனவன் ஃபெரேரா 10 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டத்தை மாற்றினார்.

பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

கீப்பிங்கில் கடைசி பந்தில் 1 ரன் தேவையான நிலையில், ரன் அவுட் செய்து அசத்தினார்.

பேட்டிங், கீப்பிங், பௌலிங் என அனைத்திலும் அசத்திய இவர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இவர் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே பேட்டிங், பௌலிங், கீப்பிங்கில் அசத்தும் நபர்கள் மிகவும் சொற்பமானவர்களே இருக்கிறார்கள்.

Donovan Ferreira, who played a key role in JSK's victory in the SA20 match, won the Player of the Match award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

வரம் தரும் வாரம்!

ரிசர்வ் வங்கியில் கிரேடு 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 125ம் ஆண்டு திருவிழா!

SCROLL FOR NEXT