விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே தொடரில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தமிழ்நாடு - மத்தியப் பிரதேசம் இடையேயான போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேசம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடிபோது, தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டதாக பிசிசிஐ தகலவறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக ரன்கள் எடுக்க ஓடி டைவ் அடித்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அடுத்த 6 வாரங்களுக்கு சாய் சுதர்சன் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கான போட்டிகளில் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவார் எனத் தெரிகிறது.
சாய் சுதர்சனுக்கு ஏற்பட்டுள்ள காயம் சாதாரணமாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை தேவைப்படும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.