தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் திடலில் இன்று (ஜனவரி 3) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 300 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் ஹர்வன்ஷ் பங்காலியா அதிகபட்சமாக 95 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.அம்பிரிஷ் 79 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். கனிஷ்க் சௌகான் 32 ரன்களும், கிலான் படேல் 26 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜேஜே பாஸன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பயாண்டா மஜோலா, நிடாண்டோ சோனி மற்று பண்டைல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.