வலைப் பயிற்சியில் பந்துவீசும் மிட்செல் ஸ்டார்க்.  படம்: ஏபி
கிரிக்கெட்

300 சர்வதேச போட்டிகள், 755 விக்கெட்டுகள்..! மிட்செல் ஸ்டார்க்கின் நிற்காத வேகம்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 300 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடைசி ஆஷஸ் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 211/3 ரன்கள் எடுத்தது.

தேநீர் இடைவேளைக்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, பின்னர் முதல்நாள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். இவரது ஓவரில் கேட்ச் தவறவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 300 (105 டெஸ்ட் + 130 ஒருநாள் + 65 டி20) போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 755 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இவ்வளவு போட்டிகள் விளையாடியும் 140கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசுகிறார்.

ஆஷஸ் தொடரில் ஒரு போட்டியிலும் நிற்காமல் விளையாடிவரும் இவரை ஆஸி. பயிற்சியாளர், “அவர் ஒரு வெறித்தனமான வீரர்” எனக் குறிப்பிட்டார்.

உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Australian fast bowler Mitchell Starc has played in 300 international matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 20 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

முதல்வா் குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப் பிரிவு வழக்கு

சித்த மருத்துவ தினம்: இலவச மருத்துவ முகாம்

இந்தோனேசியா: திடீா் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

SCROLL FOR NEXT