ஆஸ்திரேலிய மகளிர் பந்துவீச்சாளர் அன்னபெல் சதர்லேண்ட் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் தீப்தி சர்மா முதலிடத்தில் இருந்து கீழிறங்கி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவின் மகளிர் டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் செவ்வாய்க்கிழமை இரண்டு இடங்கள் முன்னேறி ஐசிசி டி20 தரவரிசையில் 13ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி 5-0 என அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 735 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட்டில் முதலிடம் பிடித்த அன்னபெல் சதர்லேண்ட் பின்னர் கீழிறங்கிய நிலையில், மீண்டும் உச்சத்துக்குத் திரும்பியுள்ளார்.
மகளிரணி டி20 பந்துவீச்சு தரவரிசை
1. அன்னபெல் சதர்லேண்ட் - 736
2. தீப்தி சர்மா - 735
3. சதியா இக்பால் - 732
4. சோபியா எக்லெஸ்டோன் - 727
5. லௌரென் பெல் - 714
டி20 மகளிர் பேட்டிங் தரவரிசை
ஆஸி. வீராங்கனை பெத் மூனி முதலிடமும் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மூன்றாமிடமும் ஷெஃபாலி வர்மா ஆறாமிடமும் வகிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.