டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை பால் ஸ்டிரிலிங் கேப்டனாக வழிநடத்துகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அயர்லாந்து அணி விவரம்
பால் ஸ்டிரிலிங் (கேப்டன்), மார்க் அடாய்ர், ராஸ் அடாய்ர், பென் காலிட்ஸ், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜியார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டார், டிம் டெக்டார், லோர்கான் டக்கர், பென் வொயிட், கிரைக் யங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.