காசு சுண்டுதலின்போது வங்கதேச கேப்டன் அப்ரார் - இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே. @BCBtigers
கிரிக்கெட்

இந்தியா - வங்கதேச மோதல்! யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க கேப்டன்கள் மறுப்பு!!

யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மொத்தம் நான்கு அணிகள் வீதம் நான்கு குழுக்களாக 16 அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

முதல் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறையில் அமெரிக்காவை வென்ற இந்திய அணி இன்று (ஜன.17) ஜிம்பாப்வேயின் புலவாயோ கிரிக்கெட் திடலில் நடைபெறும் தொடரின் 7-வது போட்டியில் வங்கதேச அணியுடன் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் காசு சுண்டுதலில் வெற்றிபெற்ற வங்கதேச கேப்டன் அப்ரார், இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவிடம் கைகுலுக்க நெருங்கி வந்த போது, ஆயுஷ் அவரை கண்டுகொள்ளாமல் கைகுலுக்க மறுத்துவிட்டார். பின்னர், இரு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்ட பின்னரும், இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதை மறுத்துவிட்டனர்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இதனால், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஹிந்து தொழிலதிபர், பத்திரிகையாசிரியர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இருதரப்பிலும் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில், வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்திருந்த வங்கதேச வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை, அணியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியதால், அவர் அணியில் இருந்து ஜன. 3 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

இதன் எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப அங்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 போட்டியில் வங்கதேச அணி வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் எனக் கூறி, பாகிஸ்தான் அணியைப் போன்றே வங்கதேசத்துக்கான போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட விவகாரமும் பெரிய பேசுபொருளானது.

முன்னதாக, கடந்தாண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பயங்கரவாத - ராணுவ சண்டை ஆசியக் கோப்பை வரை எதிரொலித்தது. இந்த இரு தொடர்களிலும் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் கைகுலுக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு: முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை! முதல்வரின் அறிவிப்பு குறித்து அமைச்சர் மூர்த்தி

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!

எம்ஜிஆருக்கு புகழ் வணக்கம்: தவெக தலைவர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!

இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

SCROLL FOR NEXT