இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது, களத்தில் டேரில் மிட்செல் 73*, க்ளென் பிலிப்ஸ் 43 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்தியா சார்பில் ஹர்சித் ராணா 2, அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
டேரில் மிட்செல் தொடர்ச்சியாக 4 முறை இந்தியாவுக்கு எதிராக 50-க்கும் அதிகமான ரன்களை கடந்துள்ளார்.
தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த நியூசி. வீரர்கள்
5 - கேன் வில்லியம்சன் (2014)
4* - டேரில் மிட்செல் (2025-26)
3 - க்ளென் டர்னர் (1975-76)
3 - ஸ்டீஃபன் ஃபிளெமிங் ( 1994-95)
3 - ரோகர் வோஸ் (1999)
3 - ராஸ் டெய்லர் (2019-20)
இந்தத் தொடரில் 300 ரன்களைக் கடந்து டேரில் மிட்செல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.