இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று (ஜனவரி 18) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் சதம் விளாசி அசத்தினர். டேரில் மிட்செல் 137 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 106 ரன்களும் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் டேரில் மிட்செல் விளாசும் இரண்டாவது சதம் இதுவாகும்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக டேரில் மிட்செல் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அவர் 4 முறை சதம் விளாசியுள்ளார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அதிகமுறை அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ள நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும்.
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் குவித்துள்ள நியூசிலாந்து வீரர்கள்
டாம் லாதம் - 145* ரன்கள், ஆக்லாந்து (2022)
மைக்கேல் பிரேஸ்வெல் - 140 ரன்கள், ஹைதராபாத் (2023)
டெவான் கான்வே - 138 ரன்கள், இந்தூர் (2023)
டேரில் மிட்செல் - 137 ரன்கள், இந்தூர் (2026)
டேரில் மிட்செல் - 134 ரன்கள், வான்கடே (2023)
டேரில் மிட்செல் - 131 ரன்கள், ராஜ்கோட் (2026)
டேரில் மிட்செல் - 130 ரன்கள், தர்மசாலா (2023)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.