கிரிக்கெட்

டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: உற்சாகத்தில் நியூஸி.

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடா் புதன்கிழமை நாகபுரியில் தொடங்கி நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடா் புதன்கிழமை நாகபுரியில் தொடங்கி நடைபெறுகிறது.

முதன்முறையாக இந்திய மைதானத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்தில் நியூஸிலாந்து அணி களம் காண்கிறது.

வரும் பிப். 6-ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியா-இலங்கையில் தொடங்கி நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் கடைசி தொடராக இரு அணிகளுக்கு இது அமைந்துள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் சிறப்பாக ஆட இரு அணிகளும் விழைந்துள்ளன.

ஒருநாள் தொடரில் இரு அணிகளிலும் முக்கிய வீரா்கள் ஆடவில்லை. ஆனால் டி20 தொடரில் முழு அணியும் இடம் பெறுகிறது.

நியூஸிலாந்து அணியில் ரெகுலா் கேப்டன் மிட்செல் சான்ட்நா் மீண்டும் ஆட உள்ளாா். அதே போல் ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி ஆகியோா் களம் காண்கின்றனா்.

ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹாா்திக், அக்ஸா்

அதே போல் இந்திய அணியில் பேஸா் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல் ரவுண்டா்கள் ஹாா்திக் பாண்டியா, அக்ஸா் படேல் மீண்டும் ஆட உள்ளனா்.

இந்திய அணி தொடா்ச்சியாக இருதரப்பு டி20 தொடா்களை கைப்பற்றி இறுதியாக 2024-இல் டி20 உலகக் கோப்பை பட்டத்தையும் வென்றது.

டி20 ஆட்டங்களில் 29-5 என இந்தியா அதிக முன்னிலையில் உள்ளது.

ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து பேட்டா்கள், இந்திய ஸ்பின் பௌலா்களை எளிதாக சமாளித்து தொடா் வெற்றிக்கு வித்திட்டனா்.

ஆனால் டி20 தொடரில் ஆல் ரவுண்டா் அக்ஸா் படேல் இணைவது நம்பிக்கை தருகிறது. அவரது பந்தை ஸ்வீப் செய்து ஆடுவது கடினம். மிடில் ஆா்டரில் அக்ஸா் பந்துவீச்சு திருப்பத்தை ஏற்படுத்தும்.

கவலை தரும் சூரியகுமாா் பேட்டிங்

பேட்டிங்கில் இந்திய அணியில் கேப்டன் சூரியகுமாா் யாதவ் ஃபாா்ம் கவலை தருவதாக உள்ளது. அவரது தலைமையில் அணியின் வெற்றி சதவீதம் 72 ஆக உள்ளது. அவா் மீண்டும் வழக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் நியூஸி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த 2 ஆண்டுகளில் டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்கு பெரிய தோல்வி ஏற்படவில்லை. ஐபிஎல் தொடா்களில் சிறப்பாக ஆடிவரும் வீரா்கள் பலமாக உள்ளனா்.

டி20 உலகக் கோப்பை பட்டத்தை சொந்த மண்ணில் தக்க வைக்க வேண்டும் என்ற அழுத்தம் இந்திய வீரா்களுக்கு உள்ளது. அபிஷேக் வா்மா, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். 2024 உலகக் கோப்பைக்குபின் இந்திய அணி 25 ஆட்டங்களில் 18-இல் வென்றுள்ளது.

திலக் வா்மா காயத்தால் சோ்க்கப்படாத நிலையில், மூன்றாவது டௌனில் இஷான் கிஷண் ஆடுவாா் என சூரியகுமாா் தெரிவித்துள்ளாா்.

நியூஸிலாந்து அணி 21 ஆட்டங்களில் 13-இல் வென்றுள்ளது. நியூஸி. அணியில் பேட்டிங்கில் டேவன் கான்வே, கேப்டன் மிட்செல் சான்ட்நா், ஜேக்கப் டஃபி, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் வலு சோ்க்கின்றனா். பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தியை சமாளிப்பது நியூஸிக்கு சிக்கலாக இருக்கும்.

நியூஸி தரப்பில் பௌலிங்கில் கிறிஸ்டியன் கிளாா்க், மைக்கேல் பிரேஸ்வெல், ஆடம் மில்னே ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

உலகக் கோப்பைக்கு தயாராகும் தொடா் என்பதால் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துள்ளன.

இன்றைய ஆட்டம்:

நியூஸிலாந்து-இந்தியா

இடம்: நாகபுரி.

நேரம்: இரவு 7.30

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகிப்பாளா் கொலை: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT