முகப்பு
கிரிக்கெட்

பாபர் அசாம் அதிரடி நீக்கம்! வங்கதேச ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!!

வங்கதேச ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 5 மார்ச் 2026, 3:42 pm IST
பாபர் அசாம். - படம்: ஐசிசி.
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் மூத்த வீரர் பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற மார்ச் 11 ஆம் தேதி தொடங்குகிறது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் மார்ச் 11, 13, 15 ஆகிய மூன்று தேதிகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று (மார்ச் 4) அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சரியாக சோபிக்காத பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் அணியில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்த பாபர் அசாம், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். சூப்பர்-8 சுற்றில் இலங்கைக்கு எதிரான கட்டாய வெற்றி போட்டியிலும் பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் ஓரங்கட்டப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாகீன் ஷா அப்ரிதி தொடர்கிறார். அப்துல் சமத், மாஸ் சதாகத், முஹம்மது காஜி கோரி, சாத் மசூத் மற்றும் ஷாமில் ஹுசைன் உள்பட 6 பேருக்கு முதல்முறை ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய காலமாகவே அதிரடியாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரரும், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்களுடன் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு முதல்முறையாக ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம்

ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரௌப், ஹுசைன் தலாத், மாஸ் சதாகத், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜூனியர், முஹம்மது காசி கோரி (விக்கெட் கீப்பர்), சாத் மசூத், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி அகா, ஷம்யுல் ஹுசைன்.

summary

Former Pakistan captain has been left out of the squad that will tour Bangladesh for three ODIs in the build-up to next year's ICC Men's Cricket World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments