இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா, ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ் இல்லை என கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட், ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்த இந்திய அணி டி20 தொடரிலாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் சொதப்பி வரும் நிலையில் இந்தத் தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
இந்தியா (பிளேயிங் லெவன்): சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.