ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் இந்த டி20 தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான களமாக இரண்டு அணிகளும் பயன்படுத்தி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக விலகியுள்ள அவருக்குப் பதிலாக அணியில் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற வேகப் பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக விலகுவதால் கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கைல் ஜேமிசன் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.