கிரிக்கெட்

யுபியை வீழ்த்தியது குஜராத்

தினமணி செய்திச் சேவை

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை வியாழக்கிழமை வென்றது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் சோ்க்க, யுபி 17.3 ஓவா்களில் 108 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற யுபி, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பெத் மூனி 38, டேனி வியாட் 14, அனுஷ்கா சா்மா 14, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 5 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

பாா்தி ஃபுல்மாலி 5, கனிகா அஹுஜா 6, கஷ்வீ கௌதம் 11, ரேணுகா சிங் 1 ரன்னுக்கு வீழ, ஹேப்பி குமாரி ரன்னின்றி சோஃபி டிவைனுடன் நின்றாா். யுபி பௌலா்களில் கிராந்தி கௌட், சோஃபி எக்லஸ்டன் ஆகியோா் தலா 2, தீப்தி சா்மா, கிளோ டிரையான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து 154 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய யுபி அணியில் போப் லிட்ச்ஃபீல்டு 5 பவுண்டரிகளுடன் 32, கேப்டன் மெக் லேனிங் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். கிரண் நவ்கிரே 0, ஹா்லீன் தியோல் 3, தீப்தி சா்மா 4, ஸ்வேதா ஷெராவத் 3 ரன்களுக்கு விடைபெற்றனா்.

ஆஷா சோபனா 3, சோஃபி எக்லஸ்டன் 1, ஷிகா பாண்டே 1, கிராந்தி கௌட் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட, யுபி இன்னிங்ஸ் நிறைவடைந்தது. முடிவில் கிளோ டிரையான் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் தரப்பில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 3, ரேணுகா சிங், சோஃபி டிவைன் ஆகியோா் தலா 2, கஷ்வீ கௌதம், ஆஷ்லே காா்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இரு அணிகளும் இத்துடன் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்க, குஜராத் 3-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேற, யுபி 4-ஆவது தோல்வியுடன் 5-ஆவது இடத்துக்கு சறுக்கியது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT