எஸ்ஏ20 கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
எஸ்ஏ20 கிரிக்கெட்டில் அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணி 148/6 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 70 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.5 பந்தில் இலக்கை அடைந்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ப்ரீட்ஸ்கி 66, டி காக் தலா 56 ரன்கள் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் ப்ரீட்ஸ்கி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2023 முதல் நடைபெற்று வருகின்றன. அனைத்து சீசனிலும் சன்ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
எஸ்ஏ20 கிரிக்கெட் வரலாற்றிலேயே பலம்வாய்ந்த அணியாக இந்த அணி மாறியிருக்கிறது.
2023 - சாம்பியன்
2024 - சாம்பியன்
2025 - ரன்னர் அப்.
2026 - இறுதிப்போட்டிக்குத் தகுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.