FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளதைப் பற்றி...

Updated On : 18 பிப்ரவரி 2026, 1:23 pm IST
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் அணி வீரர்கள். - படம்: பிடிஐ
பகிர்:

67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. கடந்த பிப். 15 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.

பெங்கால் முதல் இன்னிங்ஸ்- 328/10

Advertisement

Advertisement

அதன்படி, முதலில் ஆடிய பெங்கால் அணி தனது முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதீப் குமார் கராமி 146 ரன்கள் குவித்தார். ஜம்மு-காஷ்மீர் அணித் தரப்பில் அக்யூப் நபி தார் அட்டகாசமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்ஸ்- 302/10

பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 76.1 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி வீரர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

பெங்கால் 2-வது இன்னிங்ஸ்- 99/10

அதைத் தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு ஜம்மு-காஷ்மீரிடம் சரணடைந்தது. நபி தார், சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்ஸ்-126/6

பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

அதிகபட்சமாக வன்ஷ்ராஜ் சர்மா 43 ரன்களும், அப்துல் சமத் 30 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஜம்மு-காஷ்மீர் அணி அறிமுகமாகி 67 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை எடுத்த ஜம்மு-காஷ்மீர் வீரர் அக்யூப் நபி தார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

summary

Jammu and Kashmir scripted history by reaching the Ranji Trophy finals for the first time in their 67-year history, defeating two-time former champions Bengal by six wickets on day four of the semifinal here on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments