இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே மற்றும் டிம் செய்ஃபெர்ட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. டெவான் கான்வே 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், ரச்சின் ரவீந்திரா 2 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 24 ரன்கள், மார்க் சாப்மேன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.